Homeசெய்திகள்தமிழ்நாடு"நிலங்களை என்ன செய்யப் போறீங்க?" பரந்தூர் விவகாரத்தில் திமுக அடுக்கடுக்கான கேள்வி!

“நிலங்களை என்ன செய்யப் போறீங்க?” பரந்தூர் விவகாரத்தில் திமுக அடுக்கடுக்கான கேள்வி!

-

- Advertisement -

பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் எதிர்காலம் குறித்து திமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்."நிலங்களை என்ன செய்யப் போறீங்க?" பரந்தூர் விவகாரத்தில் திமுக அடுக்கடுக்கான கேள்வி!பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிடும் பட்சத்தில், அதற்காக நிலம் வழங்கி இழப்பீடு பெற்ற மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுக்கடுக்கான கேள்விகள்
செய்தியாளர்களைச் சந்தித்த தங்கம் தென்னரசு எழுப்பிய முக்கிய வினாக்கள்:

we-r-hiring
  • கையகப்படுத்திய நிலங்களின் நிலை என்ன?: பரந்தூர் திட்டத்திற்குத் தேவையான 5,746 ஏக்கர் நிலத்தில் சுமார் 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒரு கிராமத்தைத் தவிர பெரும்பாலான மக்கள் இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுக்கொண்டனர். இப்போது திட்டத்தைக் கைவிட்டால் இந்த நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?

  • சட்ட நடைமுறை என்ன ஆகும்?: நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி, எந்த நோக்கத்திற்காக நிலம் எடுக்கப்படுகிறதோ அதே நோக்கத்திற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

  • விவசாயிகளின் பிரச்சினை தீருமா?: கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வேறு திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினால், நீங்கள் குறிப்பிடும் அந்த புதிய சூழலில் விவசாயிகளின் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்ந்துவிடுமா?

திட்டத்திற்காகத் தங்களின் நிலங்களைக் கொடுத்த மக்களுக்கு அரசு தெளிவான பதிலை அளிக்க வேண்டும் என்றும், திட்டத்தை நீர்த்துப்போகச் செய்வது பொதுமக்களைப் பாதிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தி.மு.க எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் விஜயலட்சுமி புகார்: பேரவையில் கடும் அமளி – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி தலையீடு

MUST READ