spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவர்க்க உணர்வு எப்போது மேலோங்குகிறதோ, அப்போது கம்யூனிசம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் – சுப்பராயன்

வர்க்க உணர்வு எப்போது மேலோங்குகிறதோ, அப்போது கம்யூனிசம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் – சுப்பராயன்

-

- Advertisement -

இது தற்காலிகப் பின்னடைவே வர்க்க உணர்வு எப்போது மேலோங்குகிறதோ, அப்போது கம்யூனிசம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளாா்.வர்க்க உணர்வு எப்போது மேலோங்குகிறதோ, அப்போது கம்யூனிசம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் – சுப்பராயன்

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு 101 வது பிறந்த நாளை முன்னிட்டு செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது.. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், மூத்த தலைவர் முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்….

we-r-hiring

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டை நிறைவு செய்துள்ள இந்த நேரத்தில், கட்சி எண்ணில் அடக்குமுறைகளையும் வழக்குகளையும் சந்திதாலும், உழைக்கும் மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வருகிறது என்றார்.

மேலும், அவர் கூறுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று உள்ள சூழலில் உழைக்கும் மக்களை அணி திரட்டி நாட்டின் நலனுக்காக போராடி வருகிறது. ஒன்றிய அரசால் நாடாளுமன்ற ஜனநாயக விழிமங்கள் சுற்றிவழிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு அதிகாரத்தை வைத்து மாநிலங்களின் மேல் போர்தொடுக்கிறது. இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகமும் அரசியல் சட்டங்களும் கேள்விக்குறியாகிவிட்டது இந்த சூழலில் தான் தமிழக முதல்வர் தமிழக உரிமைக்காக போரை தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டின் ஒற்றுமைக்காக குரல் எழுப்பி வருகிறோம். தமிழகம் தான் இந்தியாவிலேயே நல்லிணக்கம் நிறைந்த பூமி, பிறர் கருத்துகளுக்கு மதிப்பளிக்கின்ற பூமி.

ஒற்றுமையை சிதைக்கின்ற பிளவு கருத்துக்களை பாஜகவினர் நாள்தோறும் பரப்பி வருகிறார்கள், இதனை தமிழக மக்கள் உணர்ந்து வரும் தேர்தலில் அவர்களை தோற்கடிப்பார்கள் எனக் கூறினாா்.

நாட்டின் பிரதமரே தமிழ் மண்ணில் நின்று தேர்தல் களமாடினாலும் கூட தமிழக மக்கள் சிறந்த பாடத்தை கற்று கொடுப்பார்கள். தமிழ் மண் எப்பொழுதும் ஒற்றுமையின் மண், அடிப்படை வாதத்தையும், பிளவு வாத கருத்துக்களை ஏற்காது, அதனை நிரூபிக்கும் வகையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சரியான பாடத்தை பாஜகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தமிழக மக்கள் கற்றுக்கொடுப்பார்கள்.வர்க்க உணர்வு எப்போது மேலோங்குகிறதோ, அப்போது கம்யூனிசம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் – சுப்பராயன்

இந்தியாவில் நடைபெற்று இருக்கின்ற வகுப்புவாத கலவரங்களின் பின்னணி யார்..? இந்து மகா சபை, ஆர் எஸ் எஸ், பிஜேபி இவர்கள்தான். இந்து மதத்தை நாங்கள் எதிர்க்கவில்லை இந்துக்களுக்கும் இந்து வழிபாட்டு முறைக்கும் தமிழ் மண்ணில் எந்த தீங்கும் இல்லை. அரசு அதை பாதுகாத்து வருகிறது, எனவே இங்கு பதற்ற அரசியலுக்கு எந்த காரணமும் இல்லை.

உலகத்திலேயே எந்த நாட்டிலும் இல்லாத மதச்சார்பின்மை என்பது அரசியல் சாசனத்தில் கொண்டுள்ள நாடு, இங்கு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இந்துக்கள் என எல்லோரும் ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகளாக இருந்து வருகிறோம், இதை சிதைக்க நினைப்பவர்களுக்கு தமிழக வரலாறு சறியான படத்தை தரும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பேசுகையில், ”நாடு இன்று ஒரு பயங்கரமான ஆபத்தைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக எச்சரித்த பேச்சாளர்கள், “இந்தியா எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடிய ஒரு எரிமலையைப் போல இருக்கிறது. மதவாதத்தாலும், சாதியவாத்தாலும் மக்கள் கூறு போடப்பட்டுள்ளனர். இந்தப் பிளவுகளை அகற்றி, தேசத்தை ஒன்றுபட வைப்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலையாய பணி” என்றார்.

இந்திய சமூகத்தை ஆழமாகப் பாதித்துள்ள வர்ணாசிரம முறை குறித்துப் பேசிய போது, “வர்ணாசிரமம் என்பது ஒரு நயவஞ்சக தந்திரம். உழைப்பைச் சுரண்டுவதற்காகவும், மக்கள் ஒருபோதும் ஒன்று சேரக் கூடாது என்பதற்காகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அமைப்பே இது. இன்றைய சூழலில் பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள், மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அரசியலில் முன்னேறத் துடிக்கின்றன” என குற்றம்சாட்டினாா்.

கம்யூனிஸ்டுகள் தேய்ந்து போய்விட்டார்கள் என்று சொல்பவர்கள் ஒன்றை உணர வேண்டும். சாதி, மத அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள தற்காலிகப் பின்னடைவு இது. வர்க்க உணர்வு எப்போது மேலோங்குகிறதோ, அப்போது கம்யூனிசம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். சாதிக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை முன்னிறுத்தி, கட்சியை வலுப்படுத்துவதே நம் முன்னுள்ள இலக்கு” என தெரிவித்துள்ளாா்.

தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு

MUST READ