முனியப்பன் கோயிலில் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்
சத்தியமங்கலத்தில் உள்ள கோட்டை முனியப்பன் கோயில் பொங்கல் திருவிழாவில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடந்த மாதம் 28ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் பொங்கல் திருவிழா கோட்டை முனியப்பன் கோவிலில் பூச்சாட்டுகளுடன் துவங்கியது.
இதனை தொடர்ந்து கோட்டை முனியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தனர். நேற்று மாலை வேல் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்தில் உள்ள வேல்களை பவானி ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
ஆண்கள் பெண்கள் என அனைவரும் தீர்த்தக் கூட மற்றும் வேல்களை கையில் ஏந்தியபடி கோவிலுக்கு வந்தனர். ஊர்வலத்தின் இறுதியில் பக்தர்கள் ஒவ்வொருவராக சாட்டையடி வாங்கி முனியப்பனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விவசாயம் செழிக்கவும், மழை பெய்யவும், நோய் இன்றி வாழ வேண்டுமென அவர் அவருக்கு உள்ள வேண்டுதல்களை நினைத்து சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.