தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பிரபல யூடியூபர் இர்ஃபான் குடும்பத்தினருடன் சென்று சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஆளுநருடன் எதற்கு திடீர் சந்திப்பு? அதுவும் குடும்பத்தினருடன்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
நடிகர்களைப் போலவே பல யூடியூபர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள். அப்படி ஒருவர் தான் இர்பான். 3.53 மில்லியன் ரசிகர்கள் இவரது யூடியூப் சேனலை பின் தொடர்கின்றார்கள். உணவுகள் குறித்த இவரது வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். பல வகையான மனிதர்களுடன் உரையாடி பல வகையான உணவுகளை பற்றி இவர் வெளியிடும் வீடியோவுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு .
இந்தியாவில் மட்டும் அல்லாது உலகின் பல நாடுகளிலும் உள்ள ஓட்டல்களில் இருக்கும் உணவு வகைகளை பற்றியும் வீடியோ வெளியிட்டு வந்தார் .இதன் மூலம் இவர் பிரபலமான ஆனார்.
உணவுகள் பற்றிய விமர்சனங்களை தொடர்ந்து, வெளிநாடுகளுக்கும் சென்று முதலை வேட்டை, விமானம் ஓட்டுதல், துப்பாக்கிச் சூடு போன்ற சாகச வீடியோக்களையும் பதிவிட்டார்.
திரை நட்சத்திரங்கள் , அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து உரையாடி தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டு வந்தார். அமெரிக்காவில் உள்ள நடிகர் நெப்போலியன் வீடு மற்றும் அவரது குடும்பத்தினரின் பேட்டி எடுத்து தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டிருந்தார். இது போன்று வெளிநாடுகளில் உள்ள திரை நட்சத்திரங்களை பேட்டி எடுத்து வெளியிட்டு வந்தார் .
இந்த நிலையில் இர்பான் ஆளுநர் ஆர். என். ரவியை தனது தாய் மற்றும் சகோதரியுடன் சென்று நேரில் சந்தித்துள்ளார். இர்பானுக்கு வரும் 14ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஆளுநரை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி இருக்கிறார். ஆளுநருக்கு அழைப்பிதழ் வழங்கிய அந்த புகைப்படங்கள்தான் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.