Homeசெய்திகள்தமிழ்நாடுமின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

-

- Advertisement -

“தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில் தனிநபர்கள் மீது தவறு இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் எச்சரித்துள்ளாா்.மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

தமிழகத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடைகள் குறித்து எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆா். நிா்மல்குமாா் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு எதுவும் இல்லை. மாநிலத்திற்கு தேவையான அளவு மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும், குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ளூர் காரணங்களால் மின்தடைகள் ஏற்படுகின்றன” என்று தெரிவித்தார்.

we-r-hiring

அதிக மின்தேவை காணப்படும் நேரங்களில் திடீர் சுமை அதிகரிப்பதால் ‘ஃபியூஸ் ஆஃப் கால்’ (FOC) பிரச்சினைகள் உருவாகின்றன என்றும், நிலத்தடி மின்கம்பி பழுதுகள், ஜம்பர் கட், மின்கம்பி துண்டிப்பு போன்ற தொழில்நுட்ப கோளாறுகளும் மின்வெட்டுக்கு காரணமாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், மின்மாற்றிகளில் அதிக சுமை ஏற்படுதல், துணை மின் நிலையங்களில் டிரிப்பிங் மற்றும் பழுதுகள், மழை, காற்று, இடி போன்ற வானிலை பாதிப்புகள் ஆகியவையும் மின்விநியோகத்தை பாதிக்கின்றன என விளக்கமளித்தார்.

மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்ய ஒவ்வொரு மின்விநியோக வட்டத்திலும் தனிப்பட்ட பராமரிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கூடுதல் தற்காலிக பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சில அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும், ஆனால் பெரும்பாலான மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், சில பகுதிகளில் தனிநபர்களின் தவறான நடவடிக்கைகளாலும் மின்தடைகள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். “பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரித்தார்.

இதனிடையே, தமிழ்நாடு மின்வாரியமும் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஊரக மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதிகளில் மின்தேவை அதிகரித்திருப்பதும், உபகரணங்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டிருப்பதும் மின்தடைக்கு முக்கிய காரணங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கிளைகள் மின்கம்பிகளைத் தொடுதல், RMU மற்றும் பீடர் கோளாறுகள், திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் தற்காலிக மின்தடைகள் ஏற்படுகின்றன என்றும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

MUST READ