Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் உரிமைத்தொகை- அமைச்சர் உதயநிதி Vs அண்ணாமலை!

மகளிர் உரிமைத்தொகை- அமைச்சர் உதயநிதி Vs அண்ணாமலை!

-

 

மகளிர் உரிமைத்தொகை- அமைச்சர் உதயநிதி Vs அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை எவ்வளவு பேருக்கு வழங்கப்படுகிறது என்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.

“ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை”- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பேட்டியை விரிவாகப் பார்ப்போம்!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கப்படும் திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். உங்கள் வரவேற்பை வைத்து 70% பேருக்கு கிடைப்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது” எனத் தெரிவித்தார்.

கவிதாவின் ஜாமீன் மனு மீது ஏப்.8- ல் தீர்ப்பு!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “மகளிர் உரிமைத்தொகை 30% பேருக்கு தான் கிடைக்கிறது. மீதமுள்ள 70% மகளிருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

MUST READ