
அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகையை வரும் 14- ஆம் தேதியே வங்கிகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்!
கடந்த செப்டம்பர் மாதம் 15- ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஒவ்வொரு மாதமும் 15- ஆம் தேதி அன்று வங்கிக் கணக்குகளில் பயனாளிகளுக்கு பணம் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த மாதம் 15- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு முந்தைய நாளான 14- ஆம் தேதியே வங்கிகளில் தொகையைச் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக, தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பயனாளர்களாகத் தேர்வுச் செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூபாய் 1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!
இதனிடையே, தகுதியுள்ள பலருக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்க தமிழக அரசு மறு வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் 1,000 ரூபாய் வங்கிக் கணக்கிற்கு வராத குடும்பத் தலைவிகள் இ-சேவை மையங்கள் மற்றும் கலைஞர் மகளிர் திட்ட உதவி மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அரசு அறிவித்தது.
தற்போது, அதற்கான பணிகளிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.