Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையிலிருந்து நேற்று 3,120 பேருந்துகள் மூலம் 1.62 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் 

சென்னையிலிருந்து நேற்று 3,120 பேருந்துகள் மூலம் 1.62 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் 

-

- Advertisement -

தொடர் விடுமுறையை ஒட்டி நேற்று சென்னையிலிருந்து  3,120 பேருந்துகள் மூலம் 1.62 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பின்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் - தொழிற்சங்க கூட்டமைப்பு

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கடந்த 2 நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று மட்டும் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 3,120 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இதில் 1.62 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று  நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,028 பேருந்துகளும் ஆக நேற்றைய தினம் மொத்தம் 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகளில்  1 லட்சத்து, 62 ஆயிரத்து, 240 பயணிகள் பயணம் மேற்காண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ