spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை

-

- Advertisement -

பெரியபாளையம் அருகே திருமணமாகாத விரக்தியில் 34வயது நபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சாங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ் (34). பல ஆண்டுகளாக இவருக்கு பெண் பார்த்து வந்தும் கைகூடாததால் விரக்தியில் இருந்து வந்துள்ளார். 34 வயதாகியும் திருமணம் ஆகாததால் ஏற்பட்ட விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜயராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தந்தை சந்திரனுக்கு தொலைபேசி மூலம் தான் விஷம் குடித்து விட்டதாக விஜயராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய மகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விஜயராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார். இது தொடர்பாக பெரியபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 34 வயதாகியும் திருமணமாக ஏக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ