spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை... இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் மறுப்பு

கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை… இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் மறுப்பு

-

- Advertisement -

சென்னை கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை என்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளதாகவும், அவருக்கு வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை தி.மு.க. அரசு மீட்டு கலைஞர் பூங்காவை உருவாக்கினால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வராது? என்றும் விமர்சித்தார். எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்பப்பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே என்ற ஆத்திரம்தான் காரணம் என்றும் அவர் குற்றாம்சாட்டியுள்ளார்.

edappadi

எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஜிப்லைன் பழுதடையவில்லை என மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுவதாகவும், பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். அவர்கள் சென்ற அந்த இருக்கைக்கு தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக ஒரு பத்து வினாடி
அவர்கள் தேங்கினர். பின்னர் அவர்கள் சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு அவர்கள் இறங்குதளம் சென்றடைந்தனர் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆகவே எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது குறிப்பிட்டுள்ளார்.

"10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம்"- சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே என்றும் இப்பூங்காவிற்குள் நுழைய பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50 என கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிப்லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை , இசை நீறூற்று போன்றவற்றிற்கு அந்தந்த சேவைக்கேற்ற குறைந்த கட்டணங்களே பெறப்படுவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ