spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வயநாடு நிலச்சரிவு : அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம்

வயநாடு நிலச்சரிவு : அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம்

-

- Advertisement -

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளுக்காக அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம்
வழங்கப்படும் என அக்கடசியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கேரள மாநிலம்
வயநாடு மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்க தற்போது
வரை 246 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவில்
சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்
பொதுச் சொத்துக்களுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளளார். இந்த இயற்கை சீற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை அப்பகுதி மக்கள் சந்தித்திருப்பது மிகுந்த மனவேதனையை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்க உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

we-r-hiring

வயநாடு பகுதியில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக
அதிமுக சார்பில் நிவாரண நிதியாக ரு.1 கோடி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ