spot_imgspot_img
Homeசெய்திகள்வானிலை17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு….

17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு….

-

- Advertisement -

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு….தமிழ் நாடு, புதுச்சோி மற்றும் காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வங்கக் கடலில் மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர் மற்றும் விருதுநகர் ஆகிய 17 மாவட்டங்களில் லேசான மழை  இன்று இரவு 7 மணிக்குள் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் – டொனால்ட் டிரம்ப்

we-r-hiring

MUST READ