தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பைவிட 15% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 43.8 மி.மீ மழை பொழியும் நிலையில் இன்று வரை 50.4 மி.மீ மழை பொழிந்துள்ளது. சென்னையில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பைவிட 34% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பாக 52.9 மி.மீ மழை பொழியும் நிலையில் இன்று வரை 70.7 மி.மீ மழை பொழிந்துள்ளது.
