கஜகஸ்தான் நாட்டின் அக்தாவு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 42 பேர் பரிதாபாக உயிரிழந்தனர்.
அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் இருந்து 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் ரஷ்யாவின் செஷன்யா பகுதியில் உள்ள குரோஸ்னி நகருக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. குரோஸ்னி நகருக்கு அருகில் சென்றபோது அங்கு கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் கஜகஸ்தான் நாட்டின் அக்தாவு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அப்போது, விமானத்தின் மீது பறவை மோதியதால் அக்தாவு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
ஓடு பாதையில் இறங்கிய விமானம் எதிர்பாராதமாக தரையில் மோதி பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 42 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மிட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விமான விபத்து தொடர்பாக ரஷ்ய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.