Homeசெய்திகள்உலகம்சரக்கு லாரி மீது பயணிகள் பேருந்து மோதி விபத்து - 21 பேர் பலி!

சரக்கு லாரி மீது பயணிகள் பேருந்து மோதி விபத்து – 21 பேர் பலி!

-

ஆப்காஸ்தானில் சாலைகள் சரியாக போடப்படாத காரணத்தினால், ஓட்டுநரின் கவனக்குறைவு போன்றவற்றால் சாலை விபத்துகள் அடுத்தடுத்து அதிகளவில் நடைபெறுகின்றன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் தென்பகுதியான ஹெல்மண்ட் மாகாணத்தில், கெராஷ்க் மாவட்டம் தெற்கு கந்தகார் மற்றும் மேற்கு ஹெராத் மாகாணங்களுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையில் வாகனங்கள் நேற்றுக் காலை சென்று கொண்டிருந்தன. அப்பொழுது திடீரென முன்னே சென்ற வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தானது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து அதிகாரி கதுர்துல்லா கூறும்போது, முதலில் பைக் ஒன்றின் மீது பயணிகள் சென்ற பஸ் ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இந்த சம்பவம் முடிந்த அடுத்த நொடியே விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்தானது எதிர் திசையில் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் பைக்கில் இருந்த 2 பேர், லாரியில் இருந்த 3 பேர் மற்றும் பஸ்ஸில் பயணித்த 16 பேர் என மொத்தம் 21 பேர் பலியானர். மேலும் 38 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 11 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாலைகள் சரியாக போடப்பபடாத காரணத்தினால் ஒட்டுநர்களின் கவனக்குறைவு போன்றவற்றால் விபத்துக்கள் நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 

MUST READ