Homeசெய்திகள்உலகம்வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பயங்கர வெடி விபத்து

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பயங்கர வெடி விபத்து

-

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பயங்கர வெடி விபத்து

வங்க தேச தலைநகர் டாக்காவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஏழு அடுக்கு வணிக கட்டடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது

குலிஸ்தான் பகுதியில் உள்ள சித்திக் பஜாரில் அமைந்துள்ள 7 அடுக்கு வணிக கட்டடத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் 200 மீட்டர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. வணிக வளாகத்தின் முன்பு பலர் உயிரிழந்து கிடந்தனர்.

கட்டடத்தில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்ததாக சந்தேகம்

தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். குறிப்பிட்ட கட்டிடத்தில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது

MUST READ