
பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் ஆறு புதிய நாடுகள் இணையவுள்ளதாக தென்னாப்பிரிக்கா அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-வது மாநாடு தென்னாப்பிரிக்கா நாட்டின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் ஆகஸ்ட் 22- ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றிக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இந்த மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் – தனபால்
இந்த நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பில் அர்ஜெண்டினா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் ஆகிய ஆறு நாடுகளை இணைக்க முடிவுச் செய்யப்பட்டிருப்பதாக தென்னாப்பிரிக்கா அதிபர் ரமஃபோசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


