Homeசெய்திகள்தமிழ்நாடுகார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…

கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…

-

- Advertisement -

கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலயான சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் மலர்க்கொடி. இவர் கரூர் மாநகர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். அதுமட்டுமின்றி அவர் வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலையில் கரூர் காந்திகிராம் பகுதியில் உள்ள பள்ளியில் சென்று பணியை பார்வையிட்டு தொடர்ந்து வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்ல கரூர்- வாங்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய இருசக்கர வாகனம் அரசு காலணி அடுத்து நரிக்குறவர் காலனியை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சேலத்தில் இருந்து கரூர் நோக்கி எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மலர்கொடி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மீது மோதி தரதரவென இழுத்துச் சென்ற நிலையில் அப்பகுதியில் இருந்த மளிகை கடை சுவற்றில் முட்டி நின்றது. இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த மலர் கொடி ரத்த வெள்ளத்தில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்து குறித்து வெங்கமேடு போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மலர்கொடி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் ஓட்டுனர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ