Homeசெய்திகள்உலகம்சீன அதிபராக ஜி ஜிங்பிங் 3வது முறையாக தேர்வு

சீன அதிபராக ஜி ஜிங்பிங் 3வது முறையாக தேர்வு

-

சீன அதிபராக ஜி ஜிங்பிங் 3வது முறையாக தேர்வு

சீன அதிபராக ஜி ஜிங்பிங் 3வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் மாவோவை விட சக்திவாய்ந்த தலைவராக ஜி ஜிங்பிங் மாறி உள்ளார்.

சீன நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான வாக்கெடுப்பில் ஜி ஜிங் பிங் அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். போட்டியாளர்கள் யாரும் இல்லாத நிலையில் வெறும் 15 நிமிடங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மேலும் அந்நாட்டின் மத்திய ஆணையத்தின் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீன அரசியல் சட்ட அமைப்பின் மீது கை வைத்து உறுதி மொழியெடுத்த ஜி ஜிங்பிங் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அதில் கட்சியின் பொது செயலாளராக ஜிங்பிங் தேர்வானார். இந்நிலையில், அக்கட்சியின் முடிவுகளை வழிமொழியும் அந்நாட்டு நாடாளுமன்றம் அவரை மீண்டும் அதிபராக்கி உள்ளது. இதன் மூலம் மவோவுக்கு பிறகு 2 முறைக்கு மேல் அதிபரானவர் என்ற பெருமையை பெற்று, ஜிங்பிங் அந்நாட்டின் சக்திவாய்ந்த தலைவராக மாறி உள்ளார். இவர் வாழ்நாள் முழுக்க இந்த பதவியில் நீடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சீன பிரதமராக உள்ள லி கெகியாங்கின் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் இரண்டு நாட்களில் புதிய பிரதமர் செய்யப்பட உள்ளார். ஜிங்பிங்கின் நெருங்கிய நண்பரான லி குவாங் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.

MUST READ