பிரேசிலின் பாண்டனல் ஈரநிலப் பகுதியில் நடப்பு ஆண்டு மட்டும் காட்டுத்தீ பத்து மடங்காக உயர்ந்து இருப்பதாக அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாண்டனல் பகுதியில் அமைந்துள்ள தெற்கு அமேசான் மழைக்காட்டு பகுதியில் ஏற்படும் காட்டு தீ இந்த ஆண்டில் பத்து மடங்காக உயர்ந்து இருப்பதாகவும் கடந்த ஆண்டு ஜூன் முதல் நடப்பாண்டு ஜூன் 5 வரை பாண்டனில் ஏற்பட்ட தீயின் எண்ணிக்கை 980 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் கனமழையினால் 2 பேர் உயிரிழப்பு- பயிர்கள் சேதம் (apcnewstamil.com)
வரும் மாதங்களில் காட்டு தீயின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் எனவும் புள்ளி விவரங்களுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பராகுவே மற்றும் பொலிவியா எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள பாண்டனல் ஈர நிலங்களில் மழைக்காலங்களின் போது 80 சதவீதம் நீர் நிறைந்திருக்கும்.
ஆனால் மே மாதத்தில் நீர் வடிவதால் இயற்கை வளம் நிறைந்த அந்த பகுதியில் அடிக்கடி காட்டு தீ ஏற்பட்டு வருகிறது.