மகளிர் தினம்- டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்
ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெண்களை போற்றி வரும் இந்த நேரத்தில் கூகுள் நிறுவனம் பெண்களை போற்றும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
டெக்னாலஜி உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் உள்ளது. இந்நிறுவனத்தின் பல விதமான சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் பிரபலமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல நட்சத்திரங்களின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள்.
மேடையில் உரையாற்றும் பெண் அரசியல் தலைவர், போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர் என சமூகத்தில் பெண்களின் பல்வேறு விதமான பங்களிப்பை இந்த டூடுல் வெளிப்படுத்துகிறது.