spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்நவம்பர் 24, 25ம் தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் - பிசிசிஐ அறிவிப்பு!

நவம்பர் 24, 25ம் தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் – பிசிசிஐ அறிவிப்பு!

-

- Advertisement -

ஐ.பி.எல். மெகா ஏலம் வரும் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

we-r-hiring

நடப்பு ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் விவரங்களை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டன. இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்!
File Photo

ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க 1,165 இந்திய வீரர்கள், 409 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1,574 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்து கொண்டுள்ள வீரர்கள் உள்பட அதிகபட்சமாக 25
வீரர்கள் கொண்ட அணியை அமைக்க முடியும். இந்த ஏலத்தில் 10 அணிகளும் மொத்தமாக ரூ.641.5 கோடியுடன், 204 வீரர்களுக்காக செலவிடப்படவுள்ளது.  இதுவரை 10 அணிகளும் ரூ.558.5 கோடியில் 46 வீரர்களை தக்கவைத்துள்ளன.

MUST READ