ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் தொடங்குகிறதா கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று (ஜன.01) பகல் 01.00 மணியளவில் 7.5 ரிக்டர் அளவுக்கோளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹோன்ஷூ அருகே 13 கி.மீ. ஆழத்தில் சுமார் 5.5 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்; எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹோன்ஷூ அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
அதேபோல், இஷிகாவா, நிகாடா, டொயாமா, யமாகாடா, ஹ்யொகோ உள்ளிட்ட இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
கடந்த 2004- ஆம் ஆண்டு இந்தோனேசியா அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவில் சுனாமி தாக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.