தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் முகாம் அலுவலகத்தில் சந்தித்து ஆலொசணை மேற்கொண்டு வருகின்றனர்.
குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதில் 5 பேர் தமிழர்கள் எனவும் அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரின் உடல் அடையாளம் காணும் பணி தீவிரமடைந்து வருகிறது.
குவைத் தீ விபத்து – 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் உயிரிழப்பு (apcnewstamil.com)
குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்கள் விவரம் கிடைக்கப்பெற்ற பின் காயமடைந்தவர்களுக்கான மருத்துவச் செலவை அயலக தமிழர் நலத்துறை வாரியம் ஏற்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.