- Advertisement -
மெக்சிகோ கண்காட்சியில் சந்திர கடவுளின் சிலை
மெக்சிகோவில் சந்திர கடவுளின் சிலை கண்டெடுக்கப்பட்டு 45-வது ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்நாட்டில் சிறப்பு கண்காட்சி கோலாகலமாக நடைபெற்றது.
மெக்சிகோ நகர அருங்காட்சியகத்தில் நடந்த சிறப்பு கண்காட்சி
மெக்சிகோ நகரில் உள்ள டெம்ப்ளோ மேயர் அருங்காட்சியகத்தில் 158 பழங்கால சிலைகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படு உள்ளன. அதில் கோயோல்சாக்யூ என்ற சந்திர கடவுளின் சிலையை காண பார்வையாளர்கள் ஆர்வம் காட்டினர். ஆயிரத்து 978-ம் ஆண்டு இந்த சிலை ஆராய்ச்சியாளர்களால் கண்டு எடுக்கப்பட்டது. 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த சிறப்பு கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்து உள்ளது. இந்த கண்காட்சியில், ஏராளமான வரலாற்று ஆர்வலர்களும், மாணவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

செழிப்பான நாகரிகம் இருந்ததன் அடையாளமாக திகழும் சிலை
ஸ்பெயின் நாட்டின் படையெடுப்புக்கு முன்பு மெக்சிகா என்ற நாகரிகம் அங்கு செழிப்பாக இருந்ததை குறிக்கும் அடையாளமாக இந்த சிலை கருதப்படுகிறது.இந்த சிலையை புகைப்படம் எடுக்கவும், அதன் வரலாறு குறித்து அறியவும் கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.