குத்துச்சண்டை உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் அமெரிக்க வீரர் மைக் டைசன் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொழில்முறை போட்டியில் பங்கேற்று இருப்பது அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
மைக்கேல் ஜெரால்டு டைசன் என்கிற மைக் டைசன் அமெரிக்க முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ஆவார். அவருடைய ஆரம்பகால வாழ்க்கையில் அதிரடி வீரராக கொண்டாடப்பட்டார்.
1982 காலக்கட்டத்தில் தாக்குதலுக்கு பெயர் பெற்ற, அதிரடி வீரராக இருந்த மைக் டைசன், 1985 முதல் உலகக் குத்துச்சண்டை போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினார்.
2005க்கு பிறகு தொழில்முறை போட்டிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது 57 வயதான மைக் டைசன் மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார்.
முன்னால் யூட்யூப் பிரபலமும் குத்துச்சண்டை வீரருமான 30 வயதான ஜெயக்பால் என்பவருடன் மைக்டைசன் மோத இருக்கிறார். வரும் நவம்பர் 15 ஆம் தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆன்லைன் நகரத்தில் இந்த குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசன் களமிறங்குவதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
அதிரடி வீரர் மைக் டைசன் மீண்டும் போட்டியில் கலந்து கொள்கிறார்.