Homeசெய்திகள்உலகம்ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயிம் காசிம் அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயிம் காசிம் அறிவிப்பு

-

ஹசன் நஸ்ரல்லா மறைவை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயிம் காசிம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காஸாவைக் குறி வைத்து கடும் தாக்குதல்!
File Photo

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இந்த போரில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் தங்களது உடமைகளை இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த போரில் ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதராக அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி லெபனான் தலைநகர் பெரூட்டில் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைரான ஹசன் நஸ்ருல்லா படுகொலை செய்யப்பட்டார். இதனால் அந்த அமைப்பு தலைவர் இன்றி  செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக, அந்த அமைப்பின் துணை செயலாளராக பொறுப்பு வகித்த நயிம் காசிம் அறிவிக்கப்பட்டுள்ளார். ஹசன் நஸ்ரல்லாவுக்கு அடுத்தக்கட்ட தலைவர்களையும் இஸ்ரேல் படுகொலை செய்ததை அடுத்து, தற்போது நியிம் காசிம் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான காசிம், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் துணை செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பை வழிநடத்தி வரும் சூராக் குழு நேற்று நயிம் காசிமை புதிய தலைவராக அறிவித்தது. இது இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

MUST READ