spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இந்திய வம்சாவளி நடிகைக்கு "தேசிய மனித நேய விருது"

இந்திய வம்சாவளி நடிகைக்கு “தேசிய மனித நேய விருது”

-

- Advertisement -

இந்திய வம்சாவளி நடிகைக்கு “தேசிய மனித நேய விருது”

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்திய வம்சாவளி நடிகைக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் விருது வழங்கி கௌரவித்தார்.

we-r-hiring

அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனிதநேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கு “தேசிய மனிதநேய விருது” என்ற உயரிய விருது அந்நாட்டின் அதிபரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. மனிதநேயம் மற்றும் வரலாறு, இலக்கியம், மொழிகள், தத்துவம் மற்றும் பிற மனிதநேய பாடங்களில் குடிமக்களின் ஈடுபாட்டை ஏற்படுத்திய தனிநபர் அல்லது குழுக்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேசிய மனித விருது வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது இந்திய வம்சாவழியை சேர்ந்த பிரபல டிவி நடிகை மிண்டி கலிங்குக்கு விருது வழங்கி அதிபர் ஜோ பைடன் கவுரவித்தார்.

இந்திய வம்சாவளி நடிகைக்கு "தேசிய மனித நேய விருது"

வேரா மிண்டி சொக்கலிங்கம் என்ற இயற்பெயரை கொண்ட 43 வயதான மிண்டி கலிங் நடிகை, நகைச்சுவையாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

மேலும் ஜூலியா லூயிஸ்-ட்ரேஃபஸ், பாடகர்கள், கிளாடிஸ் நைட் மற்றும் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் வேரா வாங் கவிஞர் ரிச்சர்ட் கிரஹாம், எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் உள்ளிட்ட 11 பேருக்கு இந்த உயரிய விருதை வழங்கினார்.

MUST READ