Homeசெய்திகள்உலகம்பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்த ரஷ்யா!

பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்த ரஷ்யா!

-

- Advertisement -

 

ஜனவரி 16 இல் தமிழ்நாட்டின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

உள்நாட்டில் தேவையைப் பூர்த்திச் செய்ய ரஷ்யா, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

ஜெயம் ரவி, நித்யா மேனன் கூட்டணியின் ‘காதலிக்க நேரமில்லை’….. ரிலீஸ் எப்போது?

இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, உணவு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது மட்டுமின்றி கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில், உள்நாட்டில் நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் தேவைகளை பூர்த்திச் செய்யவும், சுத்திகரிப்பு நிலையங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் ரஷ்யா வரும் மார்ச் 01- ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனை ரஷ்யாவின் துணை பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் குறுகிய காலத்திற்கு சர்வதேச அளவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யைதான் இறக்குமதி செய்கிறது. ரஷ்யா மட்டுமின்றி வெனிசுலா போன்ற நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதால், ரஷ்யாவின் அறிவிப்பால் இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘டிமான்ட்டி காலனி 2’ ரிலீஸ் எப்போது?

அதேபோல், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால் பெட்ரோல் விலையும் அதிகரிக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ