Homeசெய்திகள்உலகம்கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஆல்பர்ட்டா மாகாணம்

கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஆல்பர்ட்டா மாகாணம்

-

- Advertisement -
கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஆல்பர்ட்டா மாகாணம்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காட்டுத்தீ பற்றி எரிவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஆல்பர்ட்டா மாகாணம்

ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ரயில் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரு நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. அடுத்தடுத்து 110 இடங்களில் நெருப்பு பற்றி எரியும் நிலையில் காற்றின் வேகம் காரணமாக 36 இடங்களில் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியை கரும்புகை மண்டலமாக மாறி உள்ளது. ஹெலிகாப்டரில் தண்ணீர் கொண்டு சென்று தீயை அணைக்க முயற்சிகள் வீரர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஆல்பர்ட்டா மாகாணம்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆல்பர்ட்டா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு 24 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

அங்குள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

MUST READ