Homeசெய்திகள்உலகம்ரியோ-டி-ஜெனீரோ: குவானபாரா விரிகுடாவை பசுமையாக்க முயற்சி

ரியோ-டி-ஜெனீரோ: குவானபாரா விரிகுடாவை பசுமையாக்க முயற்சி

-

ரியோ-டி-ஜெனீரோ: குவானபாரா விரிகுடாவை பசுமையாக்க முயற்சி
பிரேசிலின் ரியோ-டி-ஜெனீரோவில் குவானபாரா விரிகுடா பகுதியில் அலையாத்தி காடுகளை உருவாக்கி அதனை மீண்டும் பசுமை வனமாக்கும் முயற்சியில் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ரியோ-டி-ஜெனீரோ

ரியோ-டி-ஜெனீரோவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள விரிகுடாவை மீண்டும் பசுமையாக்குவதற்காக மார் அற்பனோ என்ற தன்னார்வ அமைப்பு களம் இறங்கி உள்ளது.

இங்குள்ள ஆறுகள், பறவைகளை பாதுகாக்கும் வகையில் இந்த அமைப்பினர் அலையாத்தி காடுகளை உருவாக்கி வருகின்றனர். இதற்காக சுமார் 13 ஹெக்டரில் 30 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகின்றனர். சாதாரண மழை காடுகளை விட அலையாத்திக் காடுகளால் மட்டுமே பசுமைகுடில் வாயுக்களை ஐந்து சதவீதத்திலிருந்து 12 சதவீதம் அளவுக்கு குறைக்க முடியும் என்பது இவர்களின் கருத்தாகும்.

ரியோ-டி-ஜெனீரோ

எனவே அலையாத்தி காடுகளால் காலநிலை மாற்றத்தை தடுக்க முடியும் என்றும் தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

இன்று உலக தண்ணீர் தினம் என்பதால் இந்த நாளை ஒட்டி குவானபாரா விரிகுடாவை பசுமையாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ