ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான பதற்றங்களைத் தணிக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் புதன்கிழமை அழைப்பு விடுத்தார். அதே வேளையில், ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கும் அவர் தனது ஆதரவை தெரிவித்தார்.


சீனாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது பேசிய லாவ்ரோவ், அமெரிக்காவின் “ஆக்கிரமிப்பு” நடவடிக்கை மட்டும் இல்லையென்றால், ஈரான் இந்த முக்கிய நீர் வழிப்பாதையை மூடும் நிலைக்குச் சென்றிருக்காது என்பதை வளைகுடா அரபு நாடுகள் அங்கீகரிப்பதாகக் கூறினார்.
பிராந்தியத்தில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், நெருக்கடியைக் குறைக்கவும் வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே நிலையான பேச்சுவார்த்தைகளை மாஸ்கோ ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப் பேசிய லாவ்ரோவ், யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக ஈரானின் நலன்களுக்கு உகந்த எந்தவொரு உடன்பாட்டையும் ரஷ்யா ஆதரிக்கும் என்று உறுதிபடக் கூறினார். ”ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இதுவரை பதிவு செய்யவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்கா “யதார்த்தமாக” செயல்பட வேண்டும் என்றும், மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அமெரிக்காவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை மட்டுமின்றி, அமெரிக்காவின் நட்பு நாடுகளையே பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் லாவ்ரோவ் எச்சரித்தார்.
ஈரானியத் துறைமுகங்களை ‘முழுமையாக முடக்கிவிட்டதாக’ அமெரிக்கா அறிவிப்பு
