spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்வியட்நாமில் ஏழு டன் யானை தந்தங்கள் பறிமுதல்

வியட்நாமில் ஏழு டன் யானை தந்தங்கள் பறிமுதல்

-

- Advertisement -
வியட்நாமில் ஏழு டன் யானை தந்தங்கள் பறிமுதல்
வியட்நாம் நாட்டில் 7 டன் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

வியட்நாமில்

ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமை பொருத்தவரை தந்தம் வர்த்தகம் செய்வது தந்தத்தை கடத்துவது என்பது சட்ட விரோதமான செயல்.

we-r-hiring

ஆனால் யானை தந்தங்கள், பாங்கோலின் செதில்கள், காண்டாமிருகம் கொம்புகள் மற்றும் புலி சடலங்கள் கடத்தப்படுவதும் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகவே உள்ளது.

இந்நிலையில் ஹைபோங் நகரின் லாச் ஹுயென் துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கோலாவிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்திச் செல்லப்பட இருந்த ஏழு டன் தங்தங்கள் கண்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

வியட்நாமில்

கடந்த மாதம் லாச் ஹுயென் துறைமுகத்தில் 600 கிலோ கிராம் ஆப்பிரிக்க யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

MUST READ