Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - ஆந்திர இளைஞர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – ஆந்திர இளைஞர் பலி

-

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – ஆந்திர இளைஞர் பலி
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - ஆந்திர இளைஞர் பலி

ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வீரா, அமெரிக்காவில் முதுகலை இறுதியாண்டு படித்து வந்தார்.

எச் 1 பி விசா பெற்றுள்ள சாய்ஸ் வீரா இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியாவிற்கு வர திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் தனது படிப்புடன் சேர்த்து தனது செலவுகளுக்காக பகுதி நேர பணியாக மேற்கு கொலம்பஸில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.50 மணியளவில் கொள்ளையர்கள் சிலர் அந்த எரிவாயு நிலையத்தில் வந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.

சாய்ஸ் வீரா அவர்களை நிறுத்தியதும், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் சரமாரியாக சுடத் தொடங்கினர். சாய் ஸ்வீரா உடனே கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - ஆந்திர இளைஞர் பலி

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை கொலம்பஸ் போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் கொலம்பஸ் நகரில் 50ஆவது கொலையாக இதுபோன்ற கொள்ளையர்கள் வந்து துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த கொலையாக 50 கொலைகள் இதுவரை நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனது மகன் இரண்டு வாரங்களில் இந்தியாவிற்கு வர இருந்த நிலையில் துப்பாக்கில் சூட்டில் இறந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தார் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அவருடைய உடலை வந்து இந்தியாவுக்கு கொண்டுவர ஆந்திர அதிகாரிகள் வந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ