
தென் கொரியா பகுதியில் வட கொரியா நடத்திய திடீர் தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் தெரிவித்துள்ளது.
‘பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும்போது ஒரிஜினல் மாதிரியே இல்லை’…. விமர்சனம் செய்த இளையராஜா!
அமெரிக்கா- தென் கொரியா அண்மையில் கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், தனது நாட்டின் அணு ஆயுதப் பலத்தை நிரூபிக்கும் வகையிலும், தென் கொரியா நாட்டிற்கு சொந்தமான யோன் பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. வட கொரியாவின் தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தென் கொரியா நாட்டின் தலைமைத் தளபதி தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, யோன் பியோங் தீவில் இருந்து பொதுமக்கள் வெளியே தென் கொரியா அரசு அறிவுறுத்தியுள்ளது. வட கொரியாவின் தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பார்த்திபன் இயக்கும் புதிய படம்…. மெரினா கடற்கரையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழா!
வட கொரியாவுக்கு பதிலடி தர தென் கொரியா அரசு ஆயத்தமாகி வருவதாகவும், இதனால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் கூறுகின்றன.