spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்சீனாவில் அந்தரத்தில் தொங்கிய குழந்தைகளை தீயணைப்பு  துறையினர் மீட்டனர்

சீனாவில் அந்தரத்தில் தொங்கிய குழந்தைகளை தீயணைப்பு  துறையினர் மீட்டனர்

-

- Advertisement -

பெற்றோர்கள் பிரச்சனையில் அந்தரத்தில் தவித்த குழந்தைகள்சீனாவில் பெற்றோர்கள் பிரச்சனையில் குழந்தைகள் அடுக்குமாடி குடியிருப்பு அந்தரத்தில் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சீனாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 23வது மாடியில் வசித்து வந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை வெளிப்புற ஏசி யூனிட்டில் உட்கார வைத்து விட்டு அவரது கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

we-r-hiring

மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தின் லுயோயாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அக்டோபர் 10ம் தேதி குழந்தைகளின் அழுகை சத்தம் பக்கத்து வீட்டுகார்களுக்கு கேட்டு உள்ளது.

ஒரு பெண் குடியிருப்பு கட்டிடத்தின் 23வது மாடியிலிருந்த வெளிப்புற ஏசி யூனிட்டில் தனது 2 குழந்தைகளை (ஆண் 1, பெண் 1) அமர வைத்து கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்த்துள்ளனர். அதனை அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

மேலும் இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததாகவும், குழந்தைகளின் தாயை ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்ட, கணவன் குழந்தைகளை நெருங்க விடாமல் தடுத்துள்ளார். மேலும் கணவன் – மனைவி இடையே சண்டைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என அருகில் வசிக்கும் வீட்டுகாரர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்னர் தீயணைக்கும் வாகனம் வந்து குழந்தைகளை மீட்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ