Homeசெய்திகள்உலகம்ட்விட்டர் லோகோவை அதிரடியாக மாற்றிய எலான் மஸ்க்!

ட்விட்டர் லோகோவை அதிரடியாக மாற்றிய எலான் மஸ்க்!

-

 

அதிரடியாக லோகோவை மாற்றிய எலான் மஸ்க்!
Photo: Elon Musk

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் லோகோவாக இருந்த நீலப்பறவை நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ‘X’ என்ற லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க்.

“காலம் தாழ்த்திய காவல்துறையினர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”- முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

நெட்டிசன்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கினார். அவரது கைக்கு ட்விட்டர் வந்த பிறகு, பழைய பணியாளர்களை நீக்கியது, ப்ளூ டிக் வசதிக்கு சந்தா என்பன உள்ளிட்ட மாற்றங்களால் பலரின் அதிருப்திகளைச் சந்தித்தார் எலான் மஸ்க். ட்விட்டர் பெயரையே மாற்றப் போவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான், ட்விட்டரின் லோகோவாக இருந்த நீலப்பறவையை நீக்க விட்டு, ‘X’ என்ற லோகோவை அதிரடியாக மாற்றியுள்ளார். லோகோ மாற்றத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் அறிமுகமானது முதல் தற்போது வரை அதன் லோகோ சந்தித்த மாற்றங்களைப் பார்ப்போம். ட்விட்டர் நிறுவனம் அறிமுகமான 2006- ஆம் ஆண்டில் அதன் லோகோவாக நீல வண்ண குருவியின் உருவம் உள்ளது. இதனை சைமன் ஆக்ஸ்லே வடிவமைத்திருந்தார். அடுத்தாண்டே அந்த லோகோ மாற்றப்பட்டது. நீல வண்ணப் பறவை ஒன்று பறந்து செல்வது போல, பிஸ் ஸ்டோன் என்பவர் வடிவமைத்திருந்தார்.

அம்பேத்கர் படம்- தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு!

அந்த லோகோவையும், பிஸ் ஸ்டோன் மற்றும் பிலிப் பாஸ்குஸ்ஸோ ஆகியோர் கடந்த 2009- ஆம் ஆண்டு மாற்றினர். இதே ஜோடி, கடந்த 2010- ஆம் ஆண்டு புதிய லோகோவை வடிவமைத்தது. 2012- ஆம் ஆண்டு டாங் பா மென் என்பவர் லோகோவை மாற்றினார்.

அதன் பின்னர், ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், நாயின் உருவத்தை ட்விட்டரின் லோகோவாக மாற்றினார். பின்னர் அதனைத் திரும்பப் பெற்றார். இதன் தொடர்ச்சியாக, ‘X’ என மாற்றம் கண்டுள்ளது ட்விட்டரின் லோகோ. இந்த லோகோவை அலெக்ஸ் டூர்விலி என்பவர் வடிவமைத்துள்ளார்.

MUST READ