Homeசெய்திகள்உலகம்மனிதர்களைப் போலவே பேசிக் கொள்ளும் திமிங்கலங்கள்

மனிதர்களைப் போலவே பேசிக் கொள்ளும் திமிங்கலங்கள்

-

மனிதர்களைப் போலவே பேசிக் கொள்ளும் திமிங்கலங்கள்

நரநரவென பற்களை கடிப்பது போன்ற இந்த சத்தம் உண்மையில் திமிங்கலங்களின் மொழி என்று சொன்னால் ஆச்சரியம் வருகிறது தானே. ஆமாம் கரீபிய கடற்பகுதியில் இருக்கும் ஸ்பெர்ம் வேல்ஸ் எனப்படும் எண்ணெய் திமிங்கலங்கள் எப்படி தொடர்பு கொள்கின்றன என AI தொழில்நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தார்கள்.

அதில் மனிதர்கள் பேசும் மொழியை போலவே இவையும் உரையாடுவதை கண்டுபிடித்து இருக்கின்றனர்.

திமிங்கிலங்களிலேயே மிகப்பெரிய பற்களை கொண்டவை எண்ணெய் திமிங்கலங்கள். சுமார் 60 அடி நீளம் வரை இருக்கும் இதன் மூளை தான் உலகின் மிகப்பெரிய விலங்கின் மூளை. ஆழ்கடல் பகுதியில் கூட்டமாகவே இவை வாழ்கின்றன.

மனிதர்களைப் போலவே பேசிக் கொள்ளும் திமிங்கலங்கள்

சுமார் 60 எண்ணெய் திமிங்கலங்கள் பற்களை கடித்து எழுப்பும் ஒலிகளை ஆய்வு செய்தபோது ஒவ்வொன்றும் வேகம், ஏற்ற இறக்கம் இப்படி பலவற்றில் வேறுபட்டு இருப்பது தெரியவந்தது. திமிங்கலங்கள் எழுப்பும் ஒலிகள் சில நேரம் நீண்டும், சில நேரம் குறைந்தும், சில நேரம் மனிதர்கள் நீட்டி பேசுவது போலவும் இருந்துள்ளது.

https://www.apcnewstamil.com/news/chennai/relaxation-facility-for-motorists-in-summer-heat/83720

அதாவது தகவல் தொடர்புக்காக முதலில் சித்திரை எழுத்துக்களை பயன்படுத்திய மனிதர் அதிலிருந்து வளர்ந்து எழுத்துக்களை ஒளியேற்றி பேசுவதைப் போல இவையும் பேசுகின்றன.

MUST READ