spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பூங்கா

ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பூங்கா

-

- Advertisement -

ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பூங்கா

திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட செட் போல காட்சியளிக்கும் இந்த இடம் நிஜ மலர்களைக் கொண்ட பூங்கா என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

we-r-hiring

ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பூங்கா

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 74 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த அஷிகாகா மலர் பூங்கா.

1968 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பூங்கா 23 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சமே அலங்கார விளக்குகள் போல பூக்கும் பூக்களை கொண்டு விஸ்டேரியாமரங்கள் தான். இங்குள்ள மரம் ஒன்று சுமார் 150 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.

ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பூங்கா

வெள்ளை விஸ்டேரியா, மஞ்சள் நிற கிபானா உள்ளிட்ட பல வண்ண மலர்களுடன் அமைக்கப்பட்ட சுரங்க பாதையை காணவே சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். அதுவும் ஜப்பானில் குளிர்காலம் என்றால் இந்த பூங்காவே விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கனவு உலகம் போல காட்சி அளிக்கிறது.

ஏப்ரல் மே காலத்தில் விஸ்டேரியா மரங்களில் உள்ள மலர்கள் முழுமையாக பூத்து காட்சியளிக்கின்றன.

https://www.apcnewstamil.com/news/world-news/whales-that-mimic-humans/83729

ஆனால் அதற்கு முன்பான காலகட்டத்தில் இளஞ்சிவப்பு, கத்தரிப்பு, வெள்ளை, மஞ்சள் என ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு நிறத்தில் இந்த மலர்கள் காட்சியளிக்கிறது.

MUST READ