spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்கனடாவில் தொடங்கியுள்ள துலிப் மலர் திருவிழா

கனடாவில் தொடங்கியுள்ள துலிப் மலர் திருவிழா

-

- Advertisement -

ஒட்டாவா பூங்காவில் துலிப் மலர்

கனடாவில் துலிப் மலர் கொண்டாட்டம் தொடங்கி இருக்கும் நிலையில் ஒட்டாவா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் காட்சியை காண நாள்தோறும் ஏராளமானோர் அங்கு வருகை தருகின்றனர்.

we-r-hiring

தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் உதகையில் நடைபெறும் மலர்க் கண்காட்சி போல கனடாவில் ஆண்டு தோறும் வசந்த காலமான மே மாதத்தில் துலிப் மலர் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு திருவிழா கனடாவின் ஒட்டாவா, நயாகரா பகுதிகளில் உள்ள பூந்தோட்டங்களில் நடைபெற்று வருகிறது.

இதனை காண நாள்தோறும் ஏராளமானோர் பூங்காக்களுக்கு படையெடுக்கின்றனர்.

கனடாவில் தொடங்கியுள்ள துலிப் மலர் திருவிழாபல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் துலிப் மலர்களில் ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு பொருள் கூறப்படுகிறது. வெள்ளை என்றால் மன்னிப்பு மரியாதை ,மஞ்சள் என்றால் மகிழ்ச்சி ,சிவப்பு என்றால் காதல், பிங்க் என்றால் அன்பு, ஊதா என்றால் செல்வம் என ஒவ்வொரு வண்ண மலர்களும் அடையாளப்படுத்தப்படுகின்றன.

இங்கு வருவோர் பத்து மலர்கள் வரை பறித்து செல்ல அனுமதி உள்ள நிலையில் அனைவரும் தங்களுக்கு பிடித்த நிற மலரை பறித்து செல்கின்றனர்.

ஒட்டாவா பூங்காவில் துலிப் மலர்

திரைப்பட பாடல் காட்சியில் வரும் இடம் போல உள்ள இந்த பூங்காக்களுக்கு வந்து செல்லும் அனுபவத்தை மேலும் அழகாக்கும் வகையில் இசை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. மெல்லிய இசை பின்னணியில் அழகான காட்சி அங்கு ரம்மியமான சூழலை ஏற்படுத்துகிறது.

இரண்டாம் உலகப்போரின் போது நெதர்லாந்து இளவரசி ஜூலியானா மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அவர்களுக்கு கனடா ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல் நெதர்லாந்து விடுதலைக்கும் கனடா உதவிகரமாக இருந்திருக்கிறது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்போது இளவரசி ஜூலியானா ஆயிரக்கணக்கான துலிப் மலர்களை கனடாவுக்கு அனுப்பி வைத்தாராம்.

அப்படி ஆண்டுதோறும் நெதர்லாந்தில் இருந்து துலிப் மலர்கள் கனடாவிற்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

துலிப் மலர்களை கொண்டு கனடாவில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் துலிப் மலர் கொண்டாட்டங்கள் மக்களை கவரும் வகையில் இருப்பதை காண முடிகிறது.

MUST READ