ஏமன் நாட்டில் சிறையில் உள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏமனில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக இருந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏமனில் பணியாற்றியபோது, அந்நாட்டை சேர்ந்தவரை கொடூரமாக கொலை செய்த வழக்கில், கைதான நிமிஷா பிரியா அந்த ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறாா். அரசு மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை கைகொடுக்காத நிலையில் மத தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது செவிலியரால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருடன் இந்தியாவைச் சேரந்த மூத்த இஸ்லாமிய மத தலைவரான அபுபக்கர் முக்கதியால் மூலம் நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜயை பார்க்க ஆதவ்க்கே தடை! தவெக போராட்ட ஸ்க்ரிப்ட் அம்பலம்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
