Homeசெய்திகள்உலகம்கருந்துளை பற்றி நாசா வெளியிட்ட காணொளி

கருந்துளை பற்றி நாசா வெளியிட்ட காணொளி

-

கருந்துளை என ஒன்று இருப்பதை கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தாலும் அதன் முதல் புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்புதான் எடுக்க முடிந்தது.

கருந்துளை பற்றி நாசா வெளியிட்ட காணொளி

புகைப்படம் எடுப்பதற்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில் அதற்குள் விழுந்தால் எப்படி இருக்கும்? என்ற காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.

எரிபொருள் இருக்கும் வரை வெப்பத்தையும் ஒளியும் தொடர்ந்து கொடுக்கும் நட்சத்திரங்கள் எரிபொருள் முடிந்த பிறகு சுருங்கி அடர்த்தி அதிகரித்து கருந்துளையாக மாறும்.

அப்போது அதீத ஈர்ப்பு விசையால் அருகே இருக்கும் எந்த ஒன்றையும் தன்னுள் இழுத்துக் கொள்ளும். ஒளி கூட இதிலிருந்து தப்ப முடியாது.

 

கருந்துளை பற்றி நாசா வெளியிட்ட காணொளி

இந்தக் கருந்துளைகள் அளவுக்கு ஏற்றபடி ஸ்டெல்லர், சூப்பர்மாஸிவ், இன்டர்மீடியட் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சூரிய குடும்பம் இருக்கும் பால் வீதி மண்டலத்தில் இதுவரை சுமார் 50 ஸ்டெல்லர் கருந்துளைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பேரண்டம் குறித்த ஆய்வில் கருந்துளையை நாசா முக்கியமாக கருதுகிறது. மே இரண்டாம் வாரத்தை கருந்துளை வாரமாக கடைப்பிடித்து வரும் நாசா கருந்துளைக்குள் விழுந்தால் எப்படி இருக்கும்? என்பது தொடர்பான மெய் நிகர் காட்சி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

ஒவ்வொரு விண்மீன் மண்டலத்திலும் ஒரு சூப்பர் மாஸ் கருந்துளைகள் இருக்கும். பூமி சூரியனைச் சுற்றி வருவதைப் போலவே நமது சூரியனும் சூரியனுடன் பால்வீதியில் இருக்கும் மற்ற நட்சத்திரங்களும் சாகித்தாரியஸ் எ என்ற கருந்துளையை சுற்றி வருகின்றன.

MUST READ