spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டி! அபராதம் விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்!

புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டி! அபராதம் விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்!

-

- Advertisement -

சிங்கப்பூரில் வனவிலங்கு மேலாண்மை துறையிடம் உரிய அனுமதி பெறாமல் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மூதாட்டிக்கு சுமார் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டி! அபராதம் விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்!சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஷாம்லா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே புறாக்களுக்கு உணவளித்து வந்துள்ளார். சிங்கப்பூரில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்றால் வனவிலங்கு மேலாண்மை அதிகாரியிடம் அனுமதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஷாம்லா எந்த அனுமதியும் பெறாமல் புறாக்களுக்கு உணவு அளித்து வந்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ஷாம்லா புறாக்களுக்கு உணவளித்த போதே அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி இருந்த போதிலும், மீண்டும் மீண்டும் அதே செயலில் ஈடுபட்டுள்ளாா். புறாக்களை பிடிக்கவும் முயற்சி செய்துள்ளார். அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், செயல்பட்டதால், நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் ஷாம்லாவுக்கு 80,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகைக்கடன் அடமானத்திற்கான புதிய விதிமுறைகள் 2026 ஜனவரி வரை ஒத்திவைப்பு…

we-r-hiring

MUST READ