spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இந்தோனேசியாவில் கல் குவாரியில் விபத்து...4வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்...

இந்தோனேசியாவில் கல் குவாரியில் விபத்து…4வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்…

-

- Advertisement -

இந்தோனேசியாவில் உள்ள கல் குவாரியில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்.இந்தோனேசியாவில் கல் குவாரியில் விபத்து...4வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்...இந்தோனேசியாவில் உள்ள ஜாவா மாகாணம் சிரேபன் நகரில் சுண்ணாம்பு கல் குவாரி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை தொழிலாளர்கள் இந்த குவாரியில் வேலை செய்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக பாறைகள் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 6 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் ஏற்கெனவே 14 பேர் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் இன்று மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அந்த தொழிலாளர்களை மீட்க இன்று நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து நடந்து நான்கு நாட்கள் ஆகும் நிலையில், அந்த 6 தொழிலாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சத்தில் உள்ளனா்.

ஸ்டாலின்தான் ஜெயிக்கப் போகிறார்! மோடிக்கு கிடைத்த ரிப்போர்ட்! அடித்துச்சொல்லும் ரவீந்திரன் துரைசாமி!

we-r-hiring

MUST READ