Homeசெய்திகள்உலகம்23 நிமிட சந்திப்பு! நிர்மலா கொடுத்த ஆஃபர்! மாட்டிக்கொண்ட சீமான்!

23 நிமிட சந்திப்பு! நிர்மலா கொடுத்த ஆஃபர்! மாட்டிக்கொண்ட சீமான்!

-

- Advertisement -

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசியது உண்மை என்றும் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்களை அவர்கள் பேசியதாகவும் பத்திரிகையாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் – சீமான் சந்திப்பு தொடர்பாக பத்திரிகையாளர் கரிகாலன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- சீமான் கடந்த சனிக்கிழமை இரவு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். ஆனால் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமனை, தான் சந்திக்கவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் மராட்டியன் என்று விமர்சித்து கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்தை அண்மையில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்புக்கு பின்னர் சங்கி என்றால், தோழன் என்று சொன்னார். அதன் தொடர்ச்சியாக தற்போது நிர்மலா சீதாராமனை சந்தித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதே கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி போன்றவர்களும் தனித்தனியாக சந்தித்து பேசி உள்ளனர். கே.சி.பழனிசாமி இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அவர் தரப்பில் அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. செங்கோட்டையன் எதற்காக சந்தித்து இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சீமான், நிர்மலா சீதாராமனை சந்தித்தாரா? இல்லையா? என்பதை பல்வேறு செய்தி தொலைக்காட்சிகளும் தெரிவித்துள்ளன. இரவு 8.30 மணிக்கு அவர் குடும்பத்தோடு நிர்மலா சீதாராமனை சந்தித்தார் என்று செய்தி வெளியிட்டுள்ளனர். அந்த செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் சீமானுக்கு ஆதரவாக செயல்படுபவை தான். ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் சீமான், ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வந்த சசிகலாவை சந்தித்துவிட்டு வந்தார். ஊடகங்களில் செய்தி வெளியானதால் அதை அவரால் மறுக்க முடியவில்லை. அதனால் அரசியல் ரீதியாக பேசவில்லை. ஈழ ஆதரவாளர் நடராஜனின் மனைவி என்ற முறையில் சசிகலாவை சென்று சந்தித்தோம் என்று விளக்கம் அளித்தார். திமுகவை எதிர்க்க சீமானுக்கு அதிகளவில் நிதி வழங்கப்பட்டது. குறிப்பாக நடராஜன் மூலம் சீமானுக்கு அதிகளவு நிதி வழங்கப்பட்டது.

திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசன டிச்கெட் விலை உயர்வு – சசிகலா கண்டனம்

அந்த வகையில் இந்த சந்திப்பு என்பது இரவு நேரத்தில் நடைபெற்றுள்ளது. ஊடகங்கள் அதனை உடனடியாக வெளிப்படுத்தி இருந்தால் சீமான் கையும் களவுமாக சிக்கி இருப்பார். ஆனால் ஊடகங்கள் மறுநாள் காலை செய்தி வெளியிட்டதால் சீமான் மறுப்பதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சீமான் , நிர்மலா சீதாராமனை சந்தித்தார் என்பதுதான் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கும் தகவலாகும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தில்  தான் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை சொன்னவர்தான் சீமான். ஆனால் வெளியில் நான் தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாக சொல்வார்.

மெட்ரோ 2 - ஆம் கட்ட செலவு தமிழ்நாடு உடையது: நிர்மலா சீதாராமன்

அதிமுக உடனான கூட்டணி விவகாரங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கவனித்து வருகிறார்கள். அவர்தான் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மிகவும் நெருக்கமானவர் வானிதி சீனிவாசன். அவர் அண்ணாமலையை போன்று பணம் பறிக்கும் நோக்கத்தில் செங்கோட்டையனை, நிர்மலா சீதாராமனுடன் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிர்மலா வருகிறார். அதை முடித்துவிட்டு கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். அப்போது தான் செங்கேட்டையன், கே.சி.பழனிசாமி மற்றும் சீமான் ஆகியோர் வரிசையாக சென்று சந்தித்துள்ளனர்.

சீமான் சந்திப்பின் நோக்கம் என்பது, அதிமுக – பாஜக கூட்டணிக்கு பி டீமாக இருந்து டம்மி வேட்பாளர்களை நிறுத்தி பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்வதுதான். இதனை கடந்த காலங்களில் சீமானை ஆதரித்த ராஜவேல் நாகராஜன் தெரிவித்துள்ளார். அது தான் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நடைபெற்றதாகவும், 23 நிமிடங்கள் நடைபெற்றது என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அப்போது, உச்சநீதிமன்றத்தில் இருக்கும் சீமான் மீதான நடிகை பாலியல் வழக்கு குறித்தும், பெரியாரை அவதூறாக பேசியதால் பதியப்பப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது.

சீமானுடைய தனித்துவம் என்பதும் அவர் நேரடியாக யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார். சீமான் நேரடியாக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது பாஜகவுக்கு தான் சாதகமாக இருக்குமே தரவி, சீமானுக்கு அல்ல. அவர் மீதான நம்பகத்தன்மை போய்விடும். பெரியார் குறித்து சீமான் அவதூறு பரப்பியதல் அவர் கட்சியில் இருந்து வெளியேறி பலரும் விஜய் கட்சியில் சேர்ந்துவிட்டனர். பலர் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு சென்றுவிட்டார்கள். சீமான் தன்னுடைய மார்கெட்டை இழந்ததால் ரஜினியை சென்று சந்தித்தார். தற்போது நிர்மலா சீதாராமனை பார்த்துள்ளார். அவர் என்றைக்கும் பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைக்கமாட்டார். வாழவே வழியில்லை என்றால் மட்டும் நேரடியாக வைத்துக்கொள்வார். ஆனால் தற்போது அவர் சிலருடைய ஆதரவுடன் சுகபோகமாக உள்ளதால் அதற்கு வாய்ப்பு இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ