19 மாதங்களுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த ஹமாஸ் பணயக் கைதி நெகிழ்சியில் குடும்பத்தினர். நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்ட ஈடான் அலெக்சாண்டர்க்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.21 வயதான ஈடன் அலெக்சாண்டர் இஸ்ரேலிய-அமெரிக்கர், இஸ்ரேல் ராணுவ பணியில் இருந்த போது அக்டோபர் 7, 2023-ல் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டார். புது போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், நல்லெண்ண அடிப்படையிலும் இவர் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளாா்.
ஈடன் அலெக்சாண்டர் விடுவிக்கப்பட்டதும் அவர் குடும்பத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு மாதங்கள் நீடித்த போர் நிறுத்தத்துக்கு பிறகு மார்ச் 18ஆம் தேதி இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. அதன் பிறகு விடுவிக்கப்பட்ட முதல் பணயக் கைதி இவர் தான். செவ்வாய்கிழமை டிரம்ப் மத்திய கிழக்கு வரும் சமயத்தில், இந்த விடுவிப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்போன் சேவை முடங்கியதால் மக்கள் அவதி… ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு…
