- Advertisement -
தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய சேவை முழுமையாக சீரானது என்று ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.செல்போன் சேவை நேற்று திடீரென முடங்கியதால், ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. செல்போன் அழைப்பு மேற்கொள்ள முடியாமல் அதன் பயனர்கள் அவதியடைந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கோரியது. தமிழ்நாடு, கேரளாவில் நேற்று செல்போன் சேவை முடங்கியது. இதனை ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு செல்போன்கள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது.
மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய சேவை முழுமையாக சீரானது என்று ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சிரமத்திற்கு வருந்துவதாக கூறி பயனா்களிடம் மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்தியை அனுப்பியது ஏர் டெல் நிறுவனம்.
குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிட வேண்டும் – துரை வைகோ வலியுறுத்தல்
