- Advertisement -
வாஷிங்டனில் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்துக்குலுங்குகின்றன.
அமெரிக்காவின் வாஷிங்டனில் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்துக் குலுங்குகின்றன. எங்கு பாா்த்தாலும், அந்தப் பூக்களின் அழகு காண்பவா் கண்ணை பறிக்கும் அளவு உள்ளது. ஆயிரக்கணக்கான செர்ரி மரங்கள் அங்கே ஆங்காங்கே நட்டுவைக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு வெள்ளை, இளஞ்சிவப்புக் நிறத்தில் கம்பளம் போல் இருக்கும். மலர்கள் சுமார் 70 விழுக்காடு பூத்த நிலையில், கொள்ளை அழகாகக் காட்சியளிக்கின்றன.