Homeசெய்திகள்உலகம்மியான்மரில் நிலநடுக்கம் - 3 பேர் பத்திரமாக மீட்பு

மியான்மரில் நிலநடுக்கம் – 3 பேர் பத்திரமாக மீட்பு

-

- Advertisement -

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 பேர் பத்திரமாக மீட்பு.மியான்மரில் நிலநடுக்கம் - 3 பேர் பத்திரமாக மீட்புமியான்மரில் NDRF வீரர்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில். இந்தியாவிலிருந்து 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மீட்புப் பணிகளுக்காக மியான்மர் சென்றுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு (NDRF) வீரர்கள் மாண்டேலே நகரில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்பேது மியான்மர் நிலநடுக்க பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்ந்துள்ளது. மேலும் 441 பேரை காணவில்லை. இதேபோல், 4,500க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் மூதாட்டி, அவரின் 2 பேத்திகள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுவதால், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு..! அலறும் மக்கள்..!

MUST READ