spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்113 - காதற்சிறப்பு உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

113 – காதற்சிறப்பு உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

113 - காதற்சிறப்பு உரைத்தல் கலைஞர் குறல் விளக்கம் திருக்குறள்

1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
         வாலெயி றூறிய நீர்

கலைஞர் குறல் விளக்கம்இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.

we-r-hiring

1122. உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
          மடந்தையொ டெம்மிடை நட்பு

கலைஞர் குறல் விளக்கம்உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.

1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
          திருநுதற் கில்லை யிடம்

கலைஞர் குறல் விளக்கம்நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக – என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!

1124. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
         அதற்கன்னள் நீங்கும் இடத்து

கலைஞர் குறல் விளக்கம்ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.

1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
         ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

கலைஞர் குறல் விளக்கம்ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.

1126. கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
         நுண்ணியர்எம் காத லவர்.

கலைஞர் குறல் விளக்கம்காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
          எழுதேம் கரப்பாக் கறிந்து

கலைஞர் குறல் விளக்கம்காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால். மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.

1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
          அஞ்சுதும் வேபாக் கறிந்து

கலைஞர் குறல் விளக்கம்சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.

1129. இமைப்பிற் கரப்பாகக் கறிவல் அனைத்திற்கே
          ஏதிலர் என்னுமிவ் வூர்

கலைஞர் குறல் விளக்கம்கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன் ; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லாதவர் என்று அவரைக் கூறும்.

1130. உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
          ஏதிலர் என்னுமிவ் வூர்

கலைஞர் குறல் விளக்கம்காதலர். எப்போதும் உள்ளத்தோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.

MUST READ